கர்நாடகாவில், பெங்களூர், மைசூர் உட்பட குறிப்பிட்ட 8 ஊர்களில், சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகும் என, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இதன்படி, பெங்களூர், மைசூர், மங்களூர், குல்பர்கா என்று அழைக்கப்பட்ட கலபுர்க்கி, தும்கூர், பிடார், உடுப்பி, மணிப்பால் ஆகிய 8 இடங்களில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, அந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது, இரவு நேர ஊரடங்கு அல்ல என்றும், கொரோனா ஊரடங்கு என்று குறிப்பிட வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.