கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மே 3ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் வரும் 10ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, 12ஆம் மாணவர்களுக்கு தேர்வை நடத்துவதா? தள்ளிவைப்பதா? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார், இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.