செவ்வாய்கிரகத்தில் வானவில் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் திட்டவட்டமாக நம்பும் நிலையில் அண்மையில் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது.
அந்தப் புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் மண் அல்லது புலம் ஒரு பொருட்டாக கருதப்படாமல், அங்கு மஞ்சள் வானில் தோன்றிய வண்ணமயமான வானவில்தான் விவாதப்பொருளாகி விட்டது.
ஆனால் அது வானவில் அல்ல என்று நாசா விளக்கம் தந்துள்ளது. செவ்வாய்கிரகத்தில் வானவில் தோன்றுவது சாத்தியமே இல்லை என்று மீண்டும் உறுதி செய்த நாசா விஞ்ஞானிகள் கேமரா லென்ஸ் மூலம் சிதறிய ஒளிரேகை தான் இப்படி வானவில் போல காட்சியளிப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.