நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் 11 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், திருப்பதி விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் 10 ஆம் தேதி வரை இலவச தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் 11 ஆம் தேதி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 10 ஆம் தேதி இரவு முதல் இலவச தரிசன டிக்கெட் மையங்களும் மூடப்பட உள்ளன.
அதன் பிறகு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.