காரை தனியாக ஓட்டிக்கொண்டு போனாலும் முககவசம் அணிவது கட்டாயம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காரை ஓட்டிச் சென்ற போது முககவசம் அணியவில்லை என்பதால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.
காரும் ஒரு பொது இடமே என்பதால், தடுப்பூசி போட்டாலும், போட்டுக்கொள்ளா விட்டாலும், முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிபதி பிரதிபா எம் சிங் உத்தரவிட்டார்.
காரை டிராபிக் சிக்னல்களில் நிறுத்தும் போது, அதை ஓட்டுபவர்கள் அடிக்கடி முன்கண்ணாடியை இறக்குவதாக குறிப்பிட்ட நீதிபதி, அதிகரித்து வரும் கொரோனாவில் இருந்து நம்மையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க குறைந்தது முககவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என கூறினார்.