ஏவுகணை உருவாக்கம் மற்றும் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களும் தங்களுடன் இணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக டிஆர்டிஒ எனப்படும் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டில் ராணுவ தளவாடப் பொருட்களை தயாரிப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி, தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை குறுகிய தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்க தனியார் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளதாக டிஆர்டிஒ தெரிவித்துள்ளது.