மேற்கு வங்கத்தில், உறவினரான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டில், வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இரவில் உறங்கிய தேர்தல் அலுவலரை, தேர்தல் ஆணையம் சஸ்பென்ட் செய்துள்ளது.
அந்த வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதனுடன் இணைந்த விவிபாட் இயந்திரம் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலுபேரியா உத்தர் என்ற சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலரான தபன் சர்க்கார் என்ற அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் பார்வையாளரின் கஸ்டடியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.