கொரோனா தொற்றுள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டோரின் வாக்குரிமையை மறுக்கக் கூடாது எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாமில் 2 கோடியே 32 லட்சம் வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 7 கோடியே 34 லட்சம் வாக்காளர்களும் உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களும், கேரளத்தில் 2 கோடியே 67 லட்சம் வாக்காளர்களும், புதுச்சேரியில் 10 லட்சம் வாக்காளர்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவின் கடைசி ஒருமணி நேரத்தில் கொரோனா தொற்றுள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டோர் முழு உடல் கவசம் அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்தார்.