சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 4,277 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 19 ரூபாய் குறைந்து 4,258 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல் நேற்று 34,216 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று 152 ரூபாய் குறைந்து 34,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று 69,700 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, இன்று 400 ரூபாய் விலை குறைந்து 69,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.