அசாமிற்கு வரும் மும்பை மற்றும் பெங்களூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளும் 72 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் எனவும், விமான நிலையத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலத்திற்கு வரும் ரயில் பயணிகளையும் கட்டாயமாக சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.