தடுப்பூசியின் முதல் டோசைப் போட்டுக் கொண்டவர்கள் தவிர புதிதாக சுகாதாரப் பணியாளர்கள் யாரும் பெயரைப் பதிவு செய்ய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் என்ற பெயரில் தகுதியற்றவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக வந்த தகவலையடுத்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி ஏற்கனவே தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள சுகாதார, முன்களப் பணியாளர்களும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் சுகாதாரப் பணியாளர்கள் என புதிதாக வரும் எந்தப் பதிவையும் ஏற்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.