ஒடிசாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு பத்து மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.
இரவு பத்து மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இரவில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.