ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நள்ளிரவு தொடங்கி அதிகாலையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், பாடல்கள் பாடப்பட்டன.
கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களிலும் கேரள மாநிலம் கோட்டயத்திலும் பெரும் திரளாக மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக முக்ககவசம் அணிந்து பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.