மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். விரைவில் தொடங்க உள்ள நிலையில் மைதான பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2 கட்டமாக மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 19 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து பரிசோதனை செய்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மும்பை மைதானத்தில் 10 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடத்த பிசிசிஐ முடிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.