டெல்லியில் முழு ஊரடங்கு அவசியமில்லை என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர் நேற்று ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறினார். கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த கெஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர்சிங்குடனும் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனாவின் நான்காம் அலை வீசுவதாகவும், அதன் பாதிப்புகள் கவலையளிப்பதாகவும் கூறினார். முகக்கசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.