காஷ்மீரில் பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
நவ்காம் என்ற இடத்தைச் சேர்ந்த அன்வர் கான் என்பவர் அப்பகுதியில் பாஜக தலைவராக இருந்து வருகிறார். நேற்று அப்பகுதியில் புகுந்த இரு தீவிரவாதிகள் அன்வர் கான் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தீவிரவாதிகளை நோக்கி பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அன்வர் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், படுகாயமடைந்த காவலர் ஒருவர் உயிரிழந்தார்.