காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு இந்தியாவிடமிருந்து 5 லட்சம் டன் வெள்ளைச் சர்க்கரையும், பருத்தியும் இறக்குமதி செய்ய அனுமதியளித்தது. இதையடுத்து ஜூன் 30ம் தேதி முதல் இறக்குமதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொடுக்காதவரை இந்தியாவிடமிருந்து பருத்தி மற்றும் சர்க்கரை வாங்குவதை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.