கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான ரயில் சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் கடைசியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் ரெயில் சேவையும் முடங்கியது. பின்னர் மே மாதம் முதல் படிப்படியாக ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சிறப்பு ரெயில்களாக நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் வெறும் 66 சதவீத ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 2 மாதங்களில் வழக்கமான ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனினும் இது மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் கொரோனா பரவல் நிலையை பொறுத்தது’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.