ஜிபே, ஃபோன்பே, பே-டிஎம் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதை தடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு பணம் வழங்க சிலர் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
ஜிபே, ஃபோன்பே, பே-டிஎம் போன்ற செயலிகள் மூலமாக ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.