சென்னையில் 22 காரட் அணிகலன் தங்கம் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து 536 ரூபாயாக உள்ளது.
சென்னையில் 22 காரட் அணிகலன் தங்கம் நேற்று ஒரு கிராம் நாலாயிரத்து 233 ரூபாயாகவும் ஒரு பவுன் 33 ஆயிரத்து 864 ரூபாயாகவும் இருந்தது. இன்று கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 536 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்றுக் கட்டி வெள்ளி ஒரு கிலோ 69 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ வெள்ளி 68 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.