டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய தலைநகர் டெல்லி திருத்தம் சட்டம் 2021 படி, மாநில அமைச்சரவை அல்லது அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு துணைநிலை ஆளுநரின் கருத்து அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளாது.
மேலும் அரசாங்கம் என்கிற வார்த்தை துணைநிலை ஆளுநரைக் குறிக்கும் என சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தாக்கல் செய்த என்.சி.டி மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது.