உள்நாட்டில் கலவரம் வெடித்துள்ள மியான்மரில், அந்நாட்டு ராணுவம் சொந்த மக்கள் மீதே குண்டு வீச்சு நடத்தியதால் ஆயிரக்கணக்கானோர் உயிரை காப்பாற்ற தாய்லாந்துக்கு ஓடி விட்டனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் மக்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்று வருகிறது. கிழக்கு எல்லையில் உள்ள முட்ரா மாவட்டத்தில் அரசுக்கு எதிரான இனக்குழுக்கள் போராட்டம் நடத்துகின்றன.
இந்த நிலையில் அந்த பகுதியில் மியான்மர் ராணுவம் தீவிர குண்டு வீச்சை நடத்தியது. அதைத் தொடர்ந்து 3 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி எல்லை கடந்து தாய்லாந்தில் அடைக்கலமாகி உள்ளனர். தாய்லாந்து அரசு வானொலி இதை உறுதி செய்துள்ளது.