எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தொடர்ந்து 6 நாட்களாக சிக்கியுள்ள பிரமாண்ட சரக்கு கப்பலால் உலகளவில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் வீசிய புழுதி புயலால் 400 மீட்டர் நீள எவர் கிவன் (Ever Given) சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. இதனால் 120 சரக்கு கப்பல்களும், 200 படகுகளும் கால்வாயை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அவற்றுள் ஏராளமான கப்பல்கள் பல நாடுகளுக்கு இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றி செல்வதால் அந்த நாடுகளில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் தரை தட்டிய இடத்தில், ஆழத்தை அதிகரிக்க கனரக எந்திரங்கள் மூலம் ஒன்பதரை லட்சம் கன அடி மணல் அள்ளப்பட்டுள்ளதால் தரைதட்டிய கப்பலை விரைவில் திருப்பி விடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.