வரும் மே மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டு விடும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், ஏர் இந்தியாவை வாங்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், அவற்றில் சிலவற்றை அரசு தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் கூறினார். ஏர் இந்தியாவுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளதாக தெரிவித்த அவர், அதை விற்பதை விட வேறு வழியில்லை என்றார்.
அதே போன்று மத்திய அரசு ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் -ம் விற்கப்படும் என்றார்.