இந்தியர்களுக்கு போட்டதை விட, பலமடங்கு அதிக தடுப்பூசி மருந்தை, உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக, ஐ.நா.பொதுச்சபையில், இந்திய நிரந்தர துணை பிரதிநிதி நாகராஜ் நாயுடு தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை எந்த ஏற்றத்தாழ்வும் இன்றி உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தில் இந்தியா உறுதியாக இருப்பதாக கூறிய அவர், இதனால் ஐ.நா.வில் உறுப்பினர்களாக உள்ள 180 க்கும் அதிகமான நாடுகள் பலன் பெறும் என்றார்.
கொரானா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல ஏழை நாடுகளுக்கு அது இதுவரை கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.