மகாராஷ்ட்ராவில் மீண்டும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது மால்கள் உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆயிரமாக உள்ள நிலையில் மகாராஷ்ட்ராவில் மட்டும் ஒரே நாளில் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் உத்தவ் தாக்கரே இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கை அறிவித்தார்.