எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் என்ற பிரமாண்ட சரக்குக் கப்பலில், பணியாற்றுபவர்களில் 25 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
400 மீட்டர் நீளமும், 2 லட்சத்து 24 ஆயிரம் டன் எடையும் கொண்ட எவர் கிவன் என்ற கப்பல் எகிப்தின் சூயல் கால்வாயைக் கடக்க முயன்றபோது குறுக்கே சிக்கிக் கொண்டது.
இதனையடுத்து கப்பலை விடுவிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் கப்பலில் பணியாற்றுபவர்களில் 24 பேர் இந்தியர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே சூயஸ் கால்வாயைக் கடக்க முடியாமல் ஏராளமான கப்பல்கள் அப்பகுதியில் தேங்கி உள்ளன. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.