புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜகவினர் வாட்சப்பில் பிரச்சாரம் செய்ததாக அளித்த புகார் மீதான விசாரணை முடியும் வரை தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, புகார் குறித்து சைபர் கிரைம் விசாரித்து வருவதாகவும், அதன் அறிக்கையை பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.