பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் மூன்று, ரபேல் போர் விமானங்கள், அடுத்த வாரம் இந்தியாவிற்கு வர உள்ளன.
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டில் பிரான்சின், டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது.
இதன்படி 2020 ஜூலை முதல் 2021 ஜனவரி வரை 11 ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த வாரம் மூன்று விமானங்களும், ஏப்ரல் மத்தியில் மேலும் ஒன்பது ரபேல் விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.