கேரள சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, தனிப்பெரும்பான்மை பெறும் அல்லது, யார் அடுத்தது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவாகும் என மெட்ரோமேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு சேகரிப்பின் போது சில இடங்களில் தொண்டர்கள் தமது காலை கழுவியதற்கு இடதுசாரிகள் கிண்டல் செய்ததை கண்டித்தார். அது இந்திய கலாச்சாரம் என்றும் இடதுசாரிகளுக்கு அது தெரியாது என்றும் அவர் கூறினார்.
கேரளாவில் தொழிற்சாலைகளே இல்லை என்ற அவர், மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமானால், தாம் பதவிக்கு வந்தால் தொழில்துறையை வளர்ச்சி அடைய செய்வேன் என கூறினார். பாஜக பெரும்பான்மை பெற்றால் முதலமைச்சராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஸ்ரீதரனுக்கு உள்ளதாக பரவலாக பேச்சு உள்ளது.