மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உள்துறை அமைச்சர் மீதான ஊழல் புகார் குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், பாஜக முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பத்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றின் மையமான மாநிலம் மாறி வருவது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார்.
பல்வேறு விவகாரங்களிலும் அவர் மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். பதவியை தக்க வைப்பதில் மட்டுமே உத்தவ் தாக்கரே அரசு குறியாக இருப்பதாக பத்னாவிஸ் சாடினார்.