சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 5 போலீசார் உயிரிழந்தனர்.
நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கன்ஹர்கான் என்ற இடத்தில் நக்ஸல் எதிர்ப்புப் படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நக்ஸலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கிய பேருந்து வெடித்துச் சிதறி தூக்கி வீசப்பட்டது.
இதில் மாவட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.