கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுவெளியில் ஹோலி பண்டிகையைக் கொண்டாட டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால்,ஹோலி, நவராத்திரி, ஷாப்-இ-பாரத் போன்ற பண்டிகைகளுக்கான கூட்டங்கள் தடை செய்யப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேற்கண்ட பண்டிகைகளின் போது பொதுவெளியில் மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் விடுத்துள்ள அறிக்கையில், அம்மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்பையில் பொதுவெளியில் பண்டிகை கொண்டாட தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.