இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா.மனித உரிமைக் கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
மிகப்பெரிய அக்னிப் பரீட்சையை சந்திக்கும் இலங்கை அதிபர் கோத்தபயா கடந்த 13ம் தேதி இந்தியாவின் ஆதரவு வாக்கைக் கோரி பிரதமர் மோடிடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினர். இதே போல் பிரதமர் மகிந்த ராஜபக்சேயும் அதிபர் கோத்தபயவும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.