நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 25ந்தேதியுடன் முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் 8ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்த கூட்டத்தொடரை கடந்த 19ந்தேதியே முடித்து கொள்ள எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்து இருந்தன.
ஆனால் முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்ற இருப்பதாகக் கூறி இந்த கோரிக்கையினை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் வருகிற 25ந்தேதி நிறைவடைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.