வீராணம் ஏரியில் இருந்து 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள அந்த ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. தற்போது கடும் வெயிலால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது.
சென்னைக்கு விநாடிக்கு 70 கன அடி வீதம் நீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இந்த அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு, இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5 கன அடி வீதம் மட்டுமே நீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்பட்டது.
ஏரியில் தற்போதுள்ள நீரைப் பயன்படுத்தி அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.