ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயுள் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மின்னணு, தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்று பெறுவதன் மூலம், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் நேரில் செல்வதைத் தவிர்க்க முடியும் என்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அல்லாத வேறு அடையாள சான்றை அளித்தால் போதுமானது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.