உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்க உள்ள கும்பமேளா காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், ஹரித்வாரில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் கும்பமேளாவுக்கு சுமார் 15 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெருந்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு, கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்தால், பரிசோதனையை அதிகப்படுத்துதல் போன்றவற்றை தீவிரமாக சுகாதாரத்துறையினர் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.