வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு வார நிறுவனத் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிப்பதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் முன்பு இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தலுக்கான புதிய விதிகளை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரில் 65வயதுக்கு மேற்பட்டோர், கருவுற்ற பெண்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் ஆகியோருக்கு நிறுவனத் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிப்பதாக அறிவித்துள்ளது.