நான்கு ஆண்டுகளுக்குள் டிபி எனப்படும் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டலின்படி , குறிப்பிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதன்படி 2025ம் ஆண்டுக்குள் காச நோய் முற்றிலும் நீக்கப்படும் என்றும் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் உலக டிபி தவிர்ப்பு தொடர்பான மாநாட்டில் காணொலி வாயிலாக ஹர்ஷ் வரதன் உரை நிகழ்த்திய போது இதனை அறிவித்தார்.