பூமி அருகே இன்று கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2001 ஃஎப் ஓ 32 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் குறுங்கோள், பூமியில் இருந்து இரண்டு மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல நூறு மீட்டர் நீளமும், விட்டமும் கொண்ட இந்தக் குறுங்கோளை கடந்த 20 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாகக் கூறும் விஞ்ஞானிகள் சூரியனை 810 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதையும் கண்டறிந்துள்ளனர்.
தற்போது பூமி அருகே கடந்து செல்லும் போது இதன் வேகம் மணிக்கு ஒரு லட்சத்து 24 கிலோ மீட்டர் ஆக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.