மகராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதம் தோறும் 100 கோடி ரூபாய் லஞ்சமாக வசூலித்துத் தருமாறு தமக்கு உத்தரவிட்டதாக முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் உள்ள விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றிடம் மாதம் இரண்டு மூன்று லட்சம் வசூலித்தாலே 40 கோடிக்கு மேல் பணம் கிடைக்கும் என்றும் மீதியை இதர நிறுவனங்களிடம் வசூலிக்கலாம் என்றும் அனில் தேஷ்முக் தம்மிடம் கூறியதாகவும் பரம்பீர்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
முகேஷ் அம்பானி இல்லம் அருகே வெடி பொருட்களுடன் காரை நிறுத்தியதாக கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸேயை, லஞ்சம் வசூலிக்க தமக்குத் துணையாக அமைச்சர் அனுப்பி வைத்ததாகவும் அந்தக் கடிதத்தில் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அனில் தேஷ்முக், பரம்பீர் சிங் மீது வழக்குத் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.