தமிழ்நாட்டைப் போன்று, புதுச்சேரியிலும், 9,10,11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியால், புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு, வருகிற திங்கட்கிழமை முதல் விடுமுறை விடப்படுவதாக, வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், திங்கட்கிழமை முதல், மறு உத்தரவு வரும் தொடர் விடுமுறை விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, வகுப்புகளை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.