குஜராத் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வணிக மால்கள், திரையரங்குகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத், ராஜ்கோட், வடோதரா, சூரத் , காந்திநகர் உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.