102 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்,16 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் 150 சதவீதம் கொரோனா தீவிரமடைந்துள்ளது என்றார்.
மகாராஷ்டிராவில் கொரோனா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும், நாட்டில் கொரோனாவால் மோசமடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் கை கழுவது ஆகியவற்றைக் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுகொள்வதாகக் கூறினார்.