இந்திய குடிமக்கள் குறித்த தேசியப் பதிவேடு தயாரிப்பு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்பி அப்துல் வகாப் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குடிமக்கள் தொடர்பான தேசிய பதிவேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டங்களில் 69 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து குடிமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்தது. இதற்காக எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்றும் அரசு உறுதியளித்தது.