பிரதமர் மோடி இன்று அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளார். புருலியாவில் பொதுக்கூட்டத்தில் தாம் பேச இருப்பதாகவும் அந்தப் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் செல்லவிருப்பது பற்றி குறிப்பிட்ட மோடி, கரீம்கஞ்ச் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் வளர்ச்சிப் பணிகள் தொடர மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்