சமூக ஊடகங்களைக் கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையத்தையோ அதிகாரியையோ நியமிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,டிஜிட்டல் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக கூறினார்.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் குழுக்கள் போன்ற சமூக ஊடகங்களில் அரசுக்கும் பிரதமர் மோன்ற தலைவர்களுக்கு எதிரான தரக்குறைவான பதிவூட்டங்களுக்கும் எதிராக கடந்த பிப்ரவரி மாதம் அரசு கடுமை காட்டியது.
36 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதை சமூக ஊடகங்கள் ஏற்க மறுத்ததால் கருத்து சுதந்திரம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.