ஆதார் கார்டுடன் இணைக்கப்பெறவில்லை என்பதற்காக ஏழைகள், பழங்குடியினர் உள்ளிட்ட 3 கோடி குடும்பங்களின் ரேசன் அட்டையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோய்லி தேவி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,பட்டினி காரணமாக தனது 11 வயது குழந்தையை பறிகொடுத்த நேர்ந்ததாக கூறியுள்ளார்.
ரேசன் அட்டைகளை பயோமெட்ரிக் முறையில் ஆதார் அட்டையுடன் இணைக்கும் நடவடிக்கையில் இணைக்கப்படாத நான்கு கோடி ரேசன் அட்டைகள் வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை போலி அட்டைகள் என்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவை ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையான காரணம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பட்டினியால் மரணம் ஏதும் நிகழவில்லை தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.