தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இதுவரை 331 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சட்டவிரோதமாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் 19.11 கோடி ரூபாய் உட்பட 112.59 கோடி ரூபாய் மதிப்பு பொருட்களும், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 133 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.